நிதி முடக்கம்: சிலாங்கூர் சுல்தானை பாஸ் சந்திப்பதால் அஸ்மின் அலி கலக்கமா?

0
4

கோலாலம்பூர், ஜன.22-
மாநில அரசு நிதியை முடக்கியது காரணமாக இவ்விவகாரத்தை சிலாங்கூர் சுல்தானிடம் கொண்டு போகவிருப்பதாக சிலாங்கூர் பாஸ் மிரட்டல் விடுத்துள்ளதைத் தொடர்ந்து மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சிலாங்கூர் பாஸின் இந்நடவடிக்கை முதிர்ச்சியற்றது என கூறிய அஸ்மின் அலி, இவ்விவகாரத்தை அரண்மனையின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியதில்லை என வலியுறுத்தினார்.

என்னை பொறுத்தவரையில் தனது சொந்த தொகுதிகளில் மேம்பாட்டு நிதியை பிரச்னையை எதிர்நோக்கியிருக்கும் எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் அது குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் பேசலாம். காரணம், மாவட்ட அதிகாரிகள்தான் நிதி காவலர்களாக உள்ளனர் என அவர் கூறினார்.

அல்லது அவர்கள் தனிப்பட்ட முறையில் என்னை வந்து சந்திக்கலாம். காரணம், அவர்களை சந்திப்பதற்கான எனது கதவு திறந்தே உள்ளது. இது குறித்து நாம் விவாதிக்கலாம். அரண்மனையிடம் கொண்டு செல்ல வேண்டியது இல்லை.
இது நிர்வாகம் சம்பந்தப்பட்டது. சிலாங்கூர் சுல்தானைச் சந்திக்க வேண்டியதில்லை என கோலசிலாங்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட போது அஸ்மின் அலி கூறியதாக கூறப்படுகின்றது.

இதற்கு முன்பு சிலாங்கூர் மாநில பாஸ் கட்சியின் ஆணையர் சாலேஹான் முக்யி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முடக்கப்பட்ட நிதி விவகாரத்தில் உடனடி தீர்வு காணப்படாவிட்டால் சிலாங்கூர் சுல்தானை சந்திப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தார்.

அதோடு, இவ்விவகாரம் தொடர்பில் அஸ்மின் அலி உடனடியாக எங்களைச் சந்தித்த பாஸ் கட்சியின் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் நிதிகள் முடப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென கூறினார்.