அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > சிலாங்கூரின் பொருளாதாரம் வலுவாக இருப்பதால் பொறாமைப்படுகின்றனர்! அஸ்மின் அலி
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சிலாங்கூரின் பொருளாதாரம் வலுவாக இருப்பதால் பொறாமைப்படுகின்றனர்! அஸ்மின் அலி

கோலசிலாங்கூர், ஜன.23-
சில தரப்பினர்கள் பல்வேறு அவதூறுகளைச் சுமத்தினாலும் சிலாங்கூர் மாநில நிர்வாகம் தொடர்ச்சியாகவும் போட்டித்தன்மையுடனும் வளர்ச்சிப் பாதையை நோக்கி வலுவாக சென்றுக்கொண்டிருப்பதாக அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.

அம்மாநிலம் சந்தித்துவரும் வளர்ச்சியின் காரணமாக அதன் மீது பொறாமையைக் கொண்டிருக்கும் சில தரப்பினர் பல்வேறு எதிர்மறையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் நம்மை தாக்குகின்றனர். இருப்பினும், மாநில தலைமைத்துவத்தின் மீது உள்ள நம்பிக்கையினால் நாங்கள் மாநிலத்தை தொடர்ந்து மேம்படுத்துவதோடு மக்களின் நல்வாழ்விற்கான சேவைகளை வழங்கி வருகிறோம் என நேற்று கம்போங் பெர்மாத்தாங் பொது திடலில் கிஸ் அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றிய போது டத்தோஸ்ரீ அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

மலேசிய புள்ளி விவரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2016ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 22.7 விழுக்காட்டை சிலாங்கூர் மாநில பதிவு செய்திருப்பதோடு முதன்மை மாநிலமாக விளங்குகின்றது. இந்த நம்பிக்கைக்குரிய வளர்ச்சி மாநிலத்தின் பொருளாதாரம் சரியான தடத்தில் இருப்பதற்கு அறிகுறியாக அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

ஆயினும், சிலாங்கூர் மாநிலத்தின் இந்த வெற்றியை சில தரப்பினர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் மறைப்பதாகவும் பொதுத்தேர்தல் நெருங்கி வரும்போது சிலாங்கூர் மீது அவதூறுகளையும் தாக்குதல்களையும் தொடுப்பதாகவும் அஸ்மின் அலி சொன்னார். மாநிலத்திலுள்ள அனைத்து மக்களின் மேம்பாட்டை நிலை நிறுத்துவதுதான் மாநில அரசுக்கு மிக முக்கியம் என அவர் உறுதியளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன