பெட்டாலிங் ஜெயா, ஜன.23-
வருகின்ற பொதுத்தேர்தலில் தங்கள் கட்சி வென்ற தொகுதிகளைக் கொண்டு அம்னோவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பாஸ் கட்சியின் தலைவர் ஒருவர் பதில் வழங்க மறுத்துள்ளார்.

பாஸ் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான அஸ்மான் இப்ராஹிம் கூறுகையில், பொதுத்தேர்தலுக்கு பிறகுதான் இது குறித்து தெரிய வரும் என கூறியதோடு பாஸ் கட்சியின் போராட்டத்தைப் போன்று ஒத்திருக்கும் தோழமையைத்தான் அக்கட்சி தேர்தெடுக்கும் என பதிலளித்தார்.

பாஸ் கட்சியின் இலக்கு தொடர்பில் அக்கட்சியின் இணையத்தள பதிவேடான ஹராக்கா டெய்லியில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். எந்தவொரு தொடர்பையும் ஏற்படுத்துவதற்கு முன்னர் நாங்கள் அது குறித்து விவாதிப்போம் என அவர் சொன்னார். பாவச்செயல் மற்றும் பாரம்பரிய நட்பு அடிப்படையில் பாஸ் முடிவெடுக்கும் என அஸ்மான் இப்ராஹிம் சொன்னார்.

முதிர்ச்சியான பரிந்துரை, அக்கட்சியின் போராட்டக் கொள்கையைப் போல் இஸ்லாமியத்தில் யார் ஆர்வம் கொண்டிருக்கின்றனர் என்பதை அக்கட்சி நன்கு அறிந்து வைத்துள்ளது. நிச்சயமாக மக்களின் நன்மைக்கும் நாட்டிற்கும் அக்கட்சி முக்கியத்துவம் அளிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், தனது கட்சி துன் மகாதீர் காலத்தைவிட நடப்பு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் காலத்தில்தான் அம்னோவுடன் ஒத்துழைப்பை நல்க முடிவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.