ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > காராபாவோ கிண்ணம் – இறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி!
விளையாட்டு

காராபாவோ கிண்ணம் – இறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி!

பிரிஸ்டல், ஜன.24 –

காராபாவோ கிண்ணம் என அழைக்கப்படும் இங்கிலாந்து லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு மென்செஸ்டர் சிட்டி தேர்வுப் பெற்றுள்ளது. செவ்வாய்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 3 – 2 என்ற கோல்களில் பிரிஸ்டல் சிட்டியை வீழ்த்தியது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த முதல் ஆட்டத்தில் 2 – 1 என்ற கோல்களில் வெற்றி பெற்றிருந்த மென்செஸ்டர் சிட்டி 5 – 3 என்ற ஒட்டு மொத்த கோல்களில் இறுதி ஆட்டத்திற்கு தகுதிப் பெற்றுள்ளது. இந்த பருவத்தில் காராபாவோ கிண்ணப் போட்டியில் பல முன்னணி கிளப்புகளை சாய்த்த பிரிஸ்டல் சிட்டி மீண்டும் தனது சொந்த அரங்கில அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இரண்டு கோல்களில் பின் தங்கியிருந்தாலும் சற்றும் சளைக்காமல் விளையாடிய பிரிஸ்டல் சிட்டி 2 – 2 என ஆட்டத்தை சமப்படுத்தியது. முன்னதாக , முதல் பாதியில் மென்செஸ்டர் சிட்டியின் முதல் கோலை லெரோய் சானே போட்டார். இரண்டாம் பாதியில் செர்ஜியோ அகுவேரோ போட்ட கோலின் மூலம் மென்செஸ்டர் சிட்டி 2 – 0 என்ற கோல்களில் ,முன்னணிக்கு சென்றது.

எனினும் மார்லோன் பாக், ஆடன் பிலின்ட் போட்ட இரண்டு கோல்களில் பிரிஸ்டல் சிட்டி ஆட்டத்தை சமப்படுத்தியது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கேவின் டி புரூன் போட்ட கோலின் வழி மென்செஸ்டர் சிட்டி வெற்றியை உறுதிச் செய்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன