திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மிஃபா ஜெர்சி அறிமுக விழா 2018!
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மிஃபா ஜெர்சி அறிமுக விழா 2018!

கோலாலம்பூர் ஜன. 24 –

இந்திய சமுதாயத்தை பிரதிநிதித்து பிரிமியர் லீக்கில் இடம் பெற்றுள்ள மிஃபா அணியின் ஜெர்சி அறிமுக விழா வருகின்ற 28/01/2018 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் சுபாங் ஜெயா ஒன் சிட்டி வணிக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

மிஃபாவின் ஜெர்சியினை மஇகாவின் தேசியத்தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்கிறார். இவருடன் இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் ஆகியோரும் உடன் இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு நமது அணிக்கான ஜெர்சியை வழங்கிய அம்ப்ரோ முரு அவர்கள் இந்த ஆண்டும் நமக்கான ஜெர்சியை வழங்கியுள்ளார். இந்த முறை லோட்டோவை மிஃபா பயன்படுத்தவுள்ளது.

அதோடு இந்த முறையும் நமது அணிக்கான ஆதரவினை பலப்படுத்த பலர் முன் வந்துள்ளார்கள். குறிப்பாக மாசா பல்கலைக்கழகம் பொருளாதார ரீதியிலும், மற்ற நிலைகளிலும் நமக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

பிரிவாடெல் நிறுவனமும் நமது அணிக்கு கைகொடுத்துள்ளது. இந்த வேளையில் மிஃபா அணிக்கு ஆதரவளிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியினை பறைசாற்றுவதாக டத்தோ டி.மோகன் கூறியுள்ளார்.

நமது அணி! நமது கடமை! நமது வெற்றி! என்ற கோட்பாட்டில் நமது அணிக்கான ஆதரவினை பலப்படுத்துவோம்! நமது அணிக்கு ஆதரவளிப்போம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன