வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > தமிழ்மலர் நாளேட்டிற்கு எதிரான அவதூறு வழக்கில் டான்ஸ்ரீ நடராஜாவிற்கு வெற்றி
முதன்மைச் செய்திகள்

தமிழ்மலர் நாளேட்டிற்கு எதிரான அவதூறு வழக்கில் டான்ஸ்ரீ நடராஜாவிற்கு வெற்றி

கோலாலம்பூர், ஜன. 26-
தமிழ் மலர் நாளேட்டிற்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கில் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா வெற்றி பெற்றார். அவருக்கு அப்பத்திரிகை வெ.5,70,000 இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கடந்த 2015ஆம் ஆண்டு தமிழ் மலர் நாளேட்டில் வெளியான கேலிச் சித்திரங்கள் மற்றும் 3 கட்டுரைகள் தொடர்பாக டான்ஸ்ரீ நடராஜா சிவில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்தக் கட்டுரைகளும் கேலிச் சித்திரங்களும் தமது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அந்நாளேட்டிற்கு எதிராக டான்ஸ்ரீ நடராஜா இந்த அவதூறு வழக்கைத் தொடுத்திருந்தார். டான்ஸ்ரீ நடராஜாவின் சார்பில் வழக்கறிஞர் ராஜசிங்கம் ஆஜரானார்.

தங்களது நாளேட்டில் வெளியான கட்டுரை உண்மையை அடிப்படையாக கொண்டதாக இருப்பதாக சம்பந்தப்பட்ட பத்திரிகை நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தற்காப்பு வாதத்தில் நியாயப்படுத்தியிருந்தார். இருப்பினும் அந்தப் பத்திரிகை வெளியிட்ட கேலிச் சித்திரங்களும் கட்டுரைகளும் அவதூறு தன்மையைக் கொண்டதால் டான்ஸ்ரீ நடராஜா இழப்பீடு தொகையை பெறும் தகுதியை பெற்றிருப்பதாக நீதிபதி டத்தோ முகமட் ஸாக்கி அப்துல் வஹாப் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் டான்ஸ்ரீ நடராஜாவுக்கு 5,70,000 வெள்ளியை இழப்பீடை வழங்கும்படி பிரதிவாதி தரப்பிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, இந்த வழக்கில் டான்ஸ்ரீ நடராஜா கோரியிருக்கும் செலவுத் தொகை தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வழங்கப்படும்.

இந்த வழக்கில் டான்ஸ்ரீ நடராஜா சார்பில் வழக்கறிஞர் ராஜசிங்கம் ஆஜரானார். பிரதிவாதியான தமிழ் மலர் நிறுவனத்தின் சார்பில் அதன் வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி ஆஜரானர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன