வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > மலேசியாவிற்கு வருகைத் தாருங்கள்-2020  சின்னத்தைச் சீண்டிய துன் மகாதீர்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

மலேசியாவிற்கு வருகைத் தாருங்கள்-2020  சின்னத்தைச் சீண்டிய துன் மகாதீர்!

பெட்டாலிங் ஜெயா, ஜன.30-
மலேசியாவிற்கு வருகைத் தாருங்கள்-2020 சின்னத்தை விமர்சித்து நம்பிக்கைக் கூட்டணியின் தலைவரான துன் டாக்டர் மகாதீர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சின்னத்தைத் தற்காத்து சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் பேசியுள்ள நிலையில் இன்று முகநூலில் பதிவிடப்பட்டுள்ள ஒரு காணொளியில் துன் மகாதீர் அதனை விமர்சித்துள்ளார்.

மலேசியாவிற்கு வருகைத் தாருங்கள்-2020 சின்னம் உண்மையில் அழகாக உள்ளது. ஆனால், அதிலுள்ள படத்தில் தெரிவது ஆமையா அல்லது மனிதனா? என அவர் கேள்வியெழுப்பினார். தாய்லாந்தின் சியாங் மெய்யில் வெளியிடப்பட்ட அந்த சின்னத்திற்கு சுற்றுலா பயணிகள் பாராட்டு தெரிவிப்பதாக நஸ்ரி கூறியிருந்தார். ஆனால், அந்த சின்னத்திற்கு சுற்றுலா பயணிகளிடம் மிகுந்த வரவேற்பு இருக்கும் என்பதை தாம் நம்பவில்லை என துன் மகாதீர் கூறினார்.

இந்த சின்னம் சுற்றுலா பயணிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் என நினைக்கின்றேன். ஒருவேளை, இந்த குழப்பமே அவர்களை கவர்ந்திழுக்கக்கூடும் என கடந்த 1999ஆம் ஆண்டு உலகம் முழுவதிலும் மலேசியா த்ருலீ ஆசியா என பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்தவருமான அவர் சொன்னார்.

சியாங் மெய்யில் நடைபெற்ற ஆசியான் சுற்றுலா கருத்தரங்கில் வெளியிடப்பட்ட இந்த சின்னத்தில் மலேசியாவிற்கு வருகைத் தாருங்கள்-2020 என்ற எழுத்து உள்ளது. அதன் பின்னால் கே.எல்.சி.சி. இரட்டை மாடி கோபுரமும் ஓராங் ஊத்தான் குரங்கு மற்றொரு குரங்கை கட்டி தழுவியிருக்கும் படமும் முக கண்ணாடி அணிந்திருந்த ஆமை இருக்கும் படமும் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த சின்னம் அவமானமாக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் பலர் கடுமையாக விமர்சித்ததோடு தங்களது விருப்பம் போல் பலர் போட்டிப்போட்டுக் கொண்டு அந்த சின்னத்தை மாற்றி வடிவமைத்து பதிவேற்றினர்.

புதிய சின்னங்களைப் பொதுமக்கள் விமர்சிப்பது வழக்கமான ஒன்றுதான் என தாம் கருதுவதாக நஸ்ரி அசிஸ் கூறினார். இந்த சின்னம் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கானது. உள்ளூர் பயன்பாட்டிற்கு அல. அதனால், அதைப்பற்றி தாம் கவலைப்படவில்லை. இந்த சின்னத்திற்கு சியாங் மெய்யில் பலத்த ஆதரவு கிடைத்தது.

காரணம், அவர்கள் இதுப்போன்ற சின்னத்தைக் கண்டதில்லை. மலேசியர்கள் இத்தகைய சின்னங்களைப் பார்த்து பழக்கப்பட்டவர்கள். இந்த சின்னத்தை மாற்றும் எண்ணத்தைத் தாம் கொண்டிருக்கவில்லை என நஸ்ரி அசிஸ் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன