அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > பத்துமலையை வந்தடைந்தது தங்கம் மற்றும் வெள்ளி ரதங்கள்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பத்துமலையை வந்தடைந்தது தங்கம் மற்றும் வெள்ளி ரதங்கள்!

பத்து கேவ்ஸ், ஜன.30
நேற்று துன் எச்.எஸ்.லீ சாலையிலிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலிருந்து இரவு மணி 10.00 அளவில் புறப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி ரதங்கள் இன்று மாலை மணி 4.50 அளவில் பக்தர்கள் படை சூழ பத்துமலைத் திருத்தலத்தை வந்தடைந்தது.

முருகனையும் விநாயகரையும் காண்பதற்காக சாலை நெடுகிலும் பக்தர்கள் காத்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திற்கு வெள்ளி ரதத்தில் முருகன் வருவார். ஆனால், இம்முறை அவருடன் தங்க ரதத்தில் அவரது அண்ணன் விநாயகரும் பத்துமலை நோக்கி வந்துள்ளார்.

இதற்காக கடந்தாண்டு 50 லட்சம் வெள்ளி செலவில் தங்கத்திலான ரதம் உருவாக்கப்பட்டது. 6.7 மீட்டரிலான இந்த தங்க ரதம் இப்பொழுதுதான் ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

நேற்று ஜாலான் துன் எச்.எஸ்.லீயுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட இந்த இரண்டு ரதங்களும் ஜாலான் துன் ரசாக் சாலை வழியாகச் சென்று, ஜாலான் ஈப்போ, ஜாலான் பெர்ஹெந்தியான், ஜாலான் ஈப்போ, ஜாலான் ஈப்போ ஐந்தாவது மைல் வாயிலாக, பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

ரதங்கள் பத்துமலையை வந்தடைந்ததைத் தொடர்ந்து கொடி ஏற்றப்பட்டு நாளை தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன