ஜோர்ஜ்டவுன், பிப்.1-
ஆசிரியையின் கைப்பேசியைத் திருடியதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக அதிருப்தியுற்று தற்கொலைக்கு முயன்ற இரண்டாம் படிவ மாணவியான வசந்தபிரியா (வயது 13) இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.

செபெராங் ஜெயா மருத்துவமனையில் வசந்தபிரியாவின் பிரேதத்தைப் பார்வையிட்ட பிறகு மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் தலைவர் டேவிட் மார்ஷல் பாக்கியநாதன் தெரிவித்தார்.

உயிரிழந்த வசந்தபிரியாவிற்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக முகநூலில் பதிவேற்றப்பட்ட காணொளியில் அவர் கூறினார். மலேசியாவிலுள்ள எந்த பள்ளியிலும் மாணவர்களுக்கு இப்படியொரு சம்பவம் நடக்கக்கூடாது. மாணவர்களும் இளைஞர்களும் தற்கொலை செய்துக்கொள்வதற்கான முடிவை ஒரு போதும் எடுக்கக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். சரியான தரப்பினரிடம் நமது பிரச்னையைப் பகிர்ந்துக்கொண்டால் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்.

பள்ளியில் பணி வழக்க நடைமுறையை (எஸ்.ஓ.பி) சரியாக பின்பற்றப்படாதது உள்பட பல்வேறு காரணங்களால் இன்று வசந்தபிரியாவை நாம் இழந்துள்ளோம் என செபெராங் ஜெயா நகராண்மை மன்றத்தின் உறுப்பினருமான டேவிட் குறிப்பிட்டார்.

வசந்தபிரியாவின் இரத்த அழுத்தம் நேற்று மாலை மணி 7.30 அளவில் குறையத் தொடங்கியது. அதிகாலை மணி 3.00 அளவில் வசந்தபிரியாவின் இரத்த அழுத்தம் இன்னும் மோசமானதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்தார் என அவர் கூறினார்.

Vasanthapiriya Passed Away .. Live update from Seberang Jaya Hospital..

Posted by Malaysian Tamilar Kural on Wednesday, January 31, 2018