ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > எரிக்சன் போட்ட அதிவேக கோலில் மண்ணை கவ்வியது மென்செஸ்டர் யுனைடெட்!
விளையாட்டு

எரிக்சன் போட்ட அதிவேக கோலில் மண்ணை கவ்வியது மென்செஸ்டர் யுனைடெட்!

லண்டன், பிப்.1 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 2 -0 என்ற கோல்களில் மென்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தி அதிரடி படைத்தது. ஆட்டம் தொடங்கிய 11 வினாடிகளில் கிறிஸ்டியன் எரிக்சன் போட்ட கோல், மென்செஸ்டர் யுனைடெட்டுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதாக அதன் நிர்வாகி ஜோசே மொரின்ஹோ தெரிவித்துள்ளார்.

எரிக்சன் போட்டுள்ள கோலானது, இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் வரலாற்றில் மிக விரைவாக போடப்பட்ட கோல்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2001 ஆம் ஆண்டில் லீட்ஸ் யுனைடெட் ஆட்டக்காரர் மார்க்கோ விடுக்கா, சார்ல்டனுக்கு எதிராக போட்டப்பட்ட கோலுடன் எரிக்சன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

எனினும் மிக விரைவாக போடப்பட்ட கோல்களில் டோட்டேன்ஹம்மின் முன்னாள் ஆட்டக்காரர் லெட்லி கிங்கும், நியூகாசல் யுனைடெட்டின் அலென் ஷேரரும் ( 10 வினாடிகள் ) முதலிடத்தில் உள்ளனர்.

28 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் யுனைடெட் தற்காப்பு ஆட்டக்காரர் பில் ஜோன்ஸ் போட்ட கோலினால் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் இரண்டாவது கோலைப் பெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் போட்ட இரண்டு கோல்கள் தனது ஆட்டக்காரர்களின் நம்பிக்கையை பாதித்துள்ளதாக மொரின்ஹோ தெரிவித்தார்.

டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரிடம் தோல்வி கண்டிருந்தாலும் மென்செஸ்டர் யுனைடெட் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இருக்கும் மென்செஸ்டர் சிட்டியைக் காட்டிலும் 15 புள்ளிகளில் பின் தங்கியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன