அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பட்டாசு வெடித்து 30 பேர் காயம்! ரத ஊர்வலத்தில் அசம்பாவிதம்
சமூகம்முதன்மைச் செய்திகள்

பட்டாசு வெடித்து 30 பேர் காயம்! ரத ஊர்வலத்தில் அசம்பாவிதம்

சுங்கைப்பட்டாணி, பிப. 2-
சுங்கைப்பட்டாணியில் வியாழக்கிழமை இரவு நடந்த தைப்பூச ரத ஊர்வலத்தின் போது வானவேடிக்கை, பட்டாசு வெடித்து சுமார் 30 பேர் காயமடைந்தனர். இரவு 8.40 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. வானவேடிக்கை நடைபெற்ற போது பட்டாசுகள் வெடித்ததால் இந்த துயரம் நிகழ்ந்தது.
தைப்பூச ரத ஊர்வலத்தின் போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதால், பொதுமக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். வானவேடிக்கையை பார்ப்பதற்கு அப்பகுதியில் பலர் கூடியிருந்ததால், தீ காயங்களுக்கு அவர்கள் இலக்காகியுள்ளனர்.
பலர் கை, கால், காதுகளில் தீ காயங்களுக்கு ஆளாகினர். துணை காவல் படையைச் சேர்ந்த கார்ப்பரல் குமார் அசோகனும் இந்த சம்பவத்தில் காயமடைந்தார்.  இவர் சுங்கைப்பட்டாணி சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மற்றவர்கள் சுங்கைப்பட்டாணில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
இந்த சம்பவத்தில் காயமுற்றவர்கள் 5 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள். இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோலமூடா போலீஸ் தலைவர் ஏசிபி சைபி அப்துல் ஹமீட் கூறினார். சம்பவம் நிகழ்ந்த ஜாலான் செகெராட்டில் கைதானவர்கள் இவர்கள் 25 முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள். இதில் சதி ஏதும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன