வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > செல்சியை வழிநடத்த நானே தகுதியானவன் – கொந்தே!
விளையாட்டு

செல்சியை வழிநடத்த நானே தகுதியானவன் – கொந்தே!

லண்டன், பிப்.3 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான செல்சி தொடர்ந்து சீரற்ற ஆட்டத்தரத்தை வெளிப்படுத்தி வந்தாலும், அந்த கிளப்பை வழி நடத்த தாமே தகுதியானவன் என நிர்வாகி அந்தோனியோ கொந்தே தெரிவித்துள்ளார். புதன்கிழமை நடந்த ஆட்டத்தில் செல்சி 0- 3 என்ற கோல்களில் வெஸ்ட் புரோம்விச் அல்பியோன் அணியிடம் தோல்வி கண்டது. இதனால் லீக் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மென்செஸ்டர் சிட்டியைக் காட்டிலும் 18 புள்ளிகளில் பின் தங்கியுள்ளது.

இந்த பருவத்தில் செல்சியில் புதிய ஆட்டக்காரர்களை வாங்குவதில் ஆக்கரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அவ்வபோது கொந்தே குறைப்பட்டு கொண்டிருந்தார். இதனால் கொந்தே, செல்சி கிளப்பில் தொடர்ந்து நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது.எனினும் தமது பணியில் தாம் அபார நம்பிக்கைக் கொண்டுள்ளதாக கொந்தே குறிப்பிட்டார்.

இதர விசயங்கள் குறித்து தாம் கவலைக் கொள்ளவில்லை என்றும் தமது பணியில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருவதாக அவர் சொன்னார். ஜனவரி மாத இறுதியில் பெல்ஜியம் ஆட்டக்காரர் மிட்சி பாட்சூவாய்யை பொருசியா டார்ட்மூன்ட் கிளப்புக்கு விற்ற செல்சி அதற்குப் பதில் அர்செனலின் ஒலிவர் ஜீரோட்டை ஒப்பந்தம் செய்துள்ளது. ஜீரோட்டின் உடல் தகுதி பரிசோதிக்கப்பட்ட பின்னரே, வோட்போர்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறக்கப்படுவார் என கொந்தே கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன