அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > சீன பெருநாளுக்கு 9 வெள்ளி வரையில் பயண சலுகையை வழங்கும் ஏர் ஆசியா!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சீன பெருநாளுக்கு 9 வெள்ளி வரையில் பயண சலுகையை வழங்கும் ஏர் ஆசியா!

கோலாலம்பூர், பிப்.3-
மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா சீன பெருநாளை முன்னிட்டு உள்ளூர் பயணத்தில் ஒரு வழிக்கு குறைந்த பட்சம் 9 வெள்ளி வரையிலும் அனைத்துலக பயணத்திற்கு 199 வெள்ளி வரையிலும் சலுகையை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த 9 வெள்ளி சலுகைக் கட்டணத்தில் ஒரு வழி பயணமாக கோலாலம்பூரிலிருந்து அலோர் ஸ்டார், ஜொகூர் பாரு, கோத்தா பாரு, பினாங்கு, கோலத்திரெங்கானு ஆகிய இடங்களுக்கு செல்ல முடியும். அதேப்போன்று, கோலாலம்பூரிலிருந்து 99 வெள்ளி கட்டணத்தில் லொம்போக், பாலி, டாவாவ், சியாங் மாய், ஹோ சி மின் சிட்டி ஆகிய இடங்களுக்கும் ஒரு வழி பயணத்தை மேற்கொள்ள முடியுமென தனது அறிக்கையின் வாயிலாக ஏர் ஆசியா தெரிவித்தது.

மேலும், இந்த சலுகையின் கீழ் கோலாலம்பூரிலிருந்து தொலைவு பயண இடங்களான மாச்சாவ். குன்மிங், ஷாந்தாவ், ஷாங்காய், ஹாங்சாவ், சப்போரோ, தைப்பேய் ஆகிய இடங்களுக்கும் 199 வெள்ளி கட்டணத்தில் செல்ல முடியும்.

இது குறித்து ஏர் ஆசியாவின் வர்த்தக பிரிவு தலைவர் ஸ்பேன்சேர் லீ கூறுகையில், கடந்த 2001ஆம் ஆண்டு முதல் அனைத்து தரப்பினரும் விமான பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்வதில் ஏர் ஆசியா நிறுவனம் மிக பெரிய வெற்றியை அடைந்துள்ளதாக கூறினார்.

நாங்களும் எங்களது தொடர்பை விரிவுபடுத்தியுள்ளோம் குறிப்பாக, உள்ளூர் மற்றும் அனைத்துலக தொடர்புகளை அதிகரித்திருக்கின்றோம். ஆகையால், இந்த விடுமுறை காலத்தில் அனைத்து தரப்பினர்களும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்கு உட்பட்ட இந்த பயணங்களுக்கான முன்பதிவு 4ஆம் தேதி வரையில் இருக்கும் என ஏர் ஆசியா தெரிவித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன