பிரீமியர் லீக் – மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய மென்செஸ்டர் யுனைடெட்!

0
1

மென்செஸ்டர், பிப்.4 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெ 2 – 0 என்ற கோல்களில் ஹடேர்ஸ்பீல்ட் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் அர்செனலின் முன்னாள் மத்திய திடல் ஆட்டக்காரர் அலெக்சிஸ் சன்சேஸ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் ஒரு கோலையும் போட்டுள்ளார்.

ஹடேர்ஸ்பீல்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஜோசே மொரின்ஹோ, தனது முன்னணி நட்சத்திரமான போல் பொக்பாவை முதன்மை அணியில் களமிறக்கவில்லை. மொரின்ஹோ இந்த முடிவு பலரை ஆச்சரியப்படுத்தியது. முதல் பாதியில் ஹடேர்ஸ்பீல்ட் தற்காப்பு அரணை உடைத்து கோல் போடுவதில் மென்செஸ்டர் யுனைடெட் சிரமத்தை எதிர்நோக்கியது.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 55 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் யுனைடெட்டின் முதல் கோலை ரொமேலு லுக்காகூ போட்டார். 13 நிமிடங்களுக்குப் பிறகு மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பினால்டி வழங்கப்பட்டது. அலெக்சிஸ் சன்சேஸ் அடித்த பந்தை ஹடேர்ஸ்பீல்ட் கோல் காவலர் தடுத்து நிறுத்தினாலும் , அதனைத் தொடர்ந்து வந்த பந்தை அலெக்சிஸ் சன்சேஸ் கோலாக்கினார். இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் மென்செஸ்டர் யுனைடெட் தனது இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here