அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > கேமரன் மலையில் மீண்டும் நிலச்சரிவு
மற்றவைமுதன்மைச் செய்திகள்

கேமரன் மலையில் மீண்டும் நிலச்சரிவு

குவாந்தான், பிப்.4-

லிப்பிஸ், கம்போங் மீட்டர் போஸ் பெத்தாவ் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டதால் ஜாலான் சுங்கை கோயான் மலை சாலை வழியாகச் செல்பவர்கள் மிகவும் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஸ்ரி அக்மார் அயோப் வலியுறுத்தினார்.

இச்சம்பவம் தொடர்பில் மேல் நடவடிக்கை எடுக்கப் பொதுப்பணித் துறையைத் தொடர்பு கொள்ளும் 1 மணி நேரத்திற்கு முன்பு சுங்கை கோயான் போலீஸ் நிலையத்திற்குச் செல்லும்படி பொது மக்களிடம் கூறப்பட்டது.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட தொடக்கக்கட்ட விசாரணைப்படி எந்த உயிர் சேதமும், வாகன பாதிப்பும் ஏற்படவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணையை பொதுப்பணித் துறை மேற்கொண்டு வருகிறது.

இதில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு போலீசார் சென்று அங்கு எச்சரிக்கைப் பலகையை வைத்துள்ளனர். அதிலும் அச்சாலை தற்போதைக்குப் பயணிக்க பாதுகாப்பானதா அல்லது இல்லையா என்பதைக் கண்டறிய நில அமைப்பு ஆய்வு மேற்கொள்வதற்கு ரோட்கேர் சென். பெர் நிறுவனத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது என செய்தியாளர்களிடம் அஸ்ரி அக்மார் குறிப்பிட்டார்.

கேமரன் மலையை நோக்கிச் செல்லும் ஒரு பாதையில் வாகனங்கள் எப்போதும் போல பயணிக்கலாம். ஆனால் கோல லிப்பீசை நோக்கிச் செல்லும் சாலை ஒரு குறிப்பிட்ட காலம் வரை மூடப்பட்டிருக்கும்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழைதான் இச்சம்பவத்திற்குக் காரணமாய் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இதன் அடிப்படையில் இரவு நேரங்களில் அப்பகுதிக்குச் செல்வோர் மிகவும் கவனமாய் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாக அஸ்ரி அக்மார் மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன