வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > மலேசியாவில் சாலை விபத்துகளின் மரண சம்பவ விகிதம் குறைந்துள்ளது!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

மலேசியாவில் சாலை விபத்துகளின் மரண சம்பவ விகிதம் குறைந்துள்ளது!

உலு சிலாங்கூர், பிப்.5-
மலேசியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரையில் நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளினாலான மரண சம்பவங்களின் விகிதம் 7 விழுக்காடு குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அரசு மலேசிய போலீஸ் படை ஓப் செலாமாட் திட்டத்தை மேற்கொண்டு வந்ததன் வாயிலாக பெருநாள் காலங்களில் இந்நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு சாலைகள் பாதுகாப்பாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

இது குறித்து மலேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முஹம்மட் ஃபுசி ஹருண் கூறுகையில், கடந்த 2016ஆம் ஆண்டு 261ஆக இருந்த சாலை விபத்து மரண சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 235ஆக குறைந்துள்ளது. அதாவது 26 சம்பவங்கள் அல்லது 10 விழுக்காடு குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சாலை விபத்துகளினால் ஏற்பட்ட மரண சம்பவங்களின் எண்ணிக்கை 2017இல் 257ஆக பதிவாகியுள்ளது. 2016ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 7.9 விழுக்காடாக இருந்தது. இதன் வழி 22 சம்பவங்கள் அல்லது 7.9 விழுக்காடு குறைந்துள்ளது.

கடந்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஓப் செலாமாட் சோதணை சாலை விபத்துகளினாலான மரண சம்பவங்களைக் குறைப்பதில் வெற்றிக்கண்டுள்ளதாக ஃபுசி ஹருண் கூறியதாக கோஸ்மோ இணையத்தள பதிவேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன