வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > பெர்சத்து , அம்னோ இளைஞர்களுக்கு இடையில் கைகலப்பு
முதன்மைச் செய்திகள்

பெர்சத்து , அம்னோ இளைஞர்களுக்கு இடையில் கைகலப்பு

கோலாலம்பூர், ஜூலை.25 – 

மறைப்பதற்கு ஒன்றுமில்லை 2 என்ற விவாத மேடையில் கலந்து கொள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு அழைப்பு விடுக்க சென்ற பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவினருக்கும் அம்னோ இளைஞர் பிரிவினருக்கும் இடையில் புத்ரா உலக வாணிப மையத்தி கைகலப்பு மூண்டது.

சண்வே புத்ரா பேராங்காடியில் இருந்து அர்மாடா என அழைக்கப்படும் பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த 30 பேர் புத்ரா உலக வாணிப மையத்தை நோக்கி வந்தனர்.

மறைப்பதற்கு ஒன்றுமில்லை 2 என்ற விவாத மேடையில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மஹாதீருடன் விவாத நடத்த வருமாறு நஜிப்பை அழைக்க அவர்கள் அங்கே திரண்டிருந்தனர்.

எனினும் அம்னோ இளைஞர் பிரிவைச் சேர்ந்த 100 பேர் அவர்களை தடுக்க முற்பட்டபோது அங்கே சிறிய சலசலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தமது முகத்தில் காயம் ஏற்பட்டதாக அர்மாடா பிரிவின் தலைவர் அஷ்ராப் முஸ்தாக்கிம் தெரிவித்துள்ளார்.

அந்த இரண்டு கும்பல்களையும் கலைந்து செல்லுமாறு போலீஸ் உத்தரவிட்டதைத் தொடர்ந்து நிலைமை சகஜ நிலைக்கு திரும்பியது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன