வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > சித்திரைப் புத்தாண்டுக்கு பொது விடுமுறை சர்ச்சையை கிளப்பும் இந்து சங்கம்
சமூகம்முதன்மைச் செய்திகள்

சித்திரைப் புத்தாண்டுக்கு பொது விடுமுறை சர்ச்சையை கிளப்பும் இந்து சங்கம்

கோலாலம்பூர், பிப், 6-

மலேசிய இந்துக்கள் கொண்டாடும் சித்திரைப் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென மலேசிய இந்து சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. முன்னதாக இன்று காலை புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் துறை அலுவலகத்தில் அது அடங்கிய மகஜரை மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷாண் தலைமையில் ஒப்படைத்தனர்.

தற்போது இந்தியர்களின் முதன்மை பண்டிகையான தீபாவளிக்கு 1 நாள் பொது விடுமுறை வழங்கப்படுகின்றது. அதேபோல் தைப்பூசத்திற்கும் சில மாநிலங்களில் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்திரைத் புத்தாண்டையும் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென மலேசிய இந்து சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

சமய ரீதியில் தமிழர்கள் பிரிந்திருந்தாலும் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற அடிப்படையில் ஒற்றுமையை பறைசாற்றி வருகின்றோம். அதற்கு தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஆனால் மலேசிய இந்து சங்கத்தைப் பொறுத்தவரையில் சித்தரைப் புத்தாண்டை தமிழ்ப் புத்தாண்டாக தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள். தற்போது சித்திரை புத்தாண்டிற்கு பொது விடுமுறை வழங்கப்பட வேண்டுமென இந்து சங்கம் மகஜர் வழங்கியிருப்பது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக வெடித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன