வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ஜெர்மனி கிண்ணம் – அரையிறுதி சுற்றில் பாயேர்ன் மூனிக்!
விளையாட்டு

ஜெர்மனி கிண்ணம் – அரையிறுதி சுற்றில் பாயேர்ன் மூனிக்!

பெர்லின், பிப். 7 –

2017/18 ஆம் பருவத்துக்கான ஜெர்மனி கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு பாயேர்ன் மூனிக் தகுதிப் பெற்றுள்ளது. செவ்வாய்கிழமை நடந்த காலிறுதி ஆட்டத்தில் பாயேர்ன் மூனிக் 6 – 0 என்ற கோல்களில் மூன்றாவது டிவிஷனைச் சேர்ந்த பாடேர்போர்ன் அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் பாயேர்ன் மூனிக் ஆட்டக்காரர் ஆர்யன் ரோபேன் இரண்டு கோல்களைப் போட்டார். ரோபேனைத் தவிர பாயேர்ன் மூனிக்கின் இதர கோல்களை கிங்ஸ்லி கோமான், ரோபேர்ட் லெவென்டோஸ்கி, ஜோஷூவா கிம்மிச், கோரேந்தின் தொலிசொ ஆகியோர் போட்டனர்.

19 முறையாக ஜெர்மனி கிண்ணத்தை கைப்பற்றும் இலக்குடன் பாயேர்ன் மூனிக், பாடேர்போர்ன் அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற இன்னும் ஓர் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் அரையிறுதியிலும் அதிரடி படைப்போம் என ஆர்யன் ரோபேன் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன