திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ஆசியாவில் 46ஆவது சிறந்த பல்கலைக்கழகமாக மலாயா பல்கலைக்கழகம் தேர்வு!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஆசியாவில் 46ஆவது சிறந்த பல்கலைக்கழகமாக மலாயா பல்கலைக்கழகம் தேர்வு!

கோலாலம்பூர், பிப். 7 – 
நாட்டின் முதன்மை அரசாங்க பல்கலைக்கழகங்களில் ஒன்றான மலாயாப் பல்கலைக்கழகம் டைம்ஸ் உயர் கல்வி நிலையம் (டி.எச்.இ) மேற்கொண்ட ஆய்வில் ஆசியாவிலே சிறந்த பல்கலைக்கழகங்கள் வரிசையில் 46ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடந்தாண்டு இந்த நிலையம் மேற்கொண்டிருந்த ஆய்வில் அப்பல்கலைக்கழகம் 59ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மலாயாப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டத்தோ டாக்டர் அப்துல் ரஹிம் கூறுகையில், இப்பல்கலைக்கழகம் இதர பல்கலைக்கழகங்களுடன் கொண்டிருக்கும் மாறுப்பாட்டின் அளவு நிர்ணயிப்பாக இந்த அடைவுநிலை விளங்குவதாக தெரிவித்தார்.

மலாயாப் பல்கலைக்கழகம் பட்டாதாரிகளுக்கான வேலை வாய்ப்பு, தொழில்துறைகளுடனான ஒத்துழைப்பு மற்றும் தொடர்பு, அனைத்துலக வியூக பரிமாற்றம் முதலானவற்றில் மேலும் மேம்படுத்த வேண்டியது இவ்வேளையில் அவசியமாகும். இப்பல்கலைக்கழகத்தை மேம்படுத்தும் நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக இப்பல்கலைக்கழகம் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக இந்த அடைவுநிலை விளங்குவதாக அவர் கூறினார்.

இந்நிலையம் மேற்கொண்ட ஆய்வில் மலேசியாவின் மேலும் 8 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம் 99-ஆவது இடத்தையும், பெட்ரோனாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 114-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக தேர்தெடுக்கப் பட்டு டைம்ஸ் உயர்கல்வி நிலையத்தின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன