ஜொகூர் பிப் 7-

மலேசிய காற்பந்து சங்கத்தின் தலைவர் துங்கு மங்கோத்தா ஜொகூர் துங்கு இஸ்மாயில் இட்ரிஸ் அவர்களை மிஃபாவின் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் தலைமையில் மிஃபா நிர்வாகத்தினர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து டத்தோ டி.மோகன் குறிப்பிடுகையில் ஒரு நல்லதொரு நிகழ்வாக இந்த சந்திப்பு அமைந்தது மகிழ்ச்சியான தருணம் என்றார். இந்த வேளையில் டிஎம்ஜே அவர்களுக்கு நன்றியினை தெரிவித்ததாக கூறினார்.

அவருடன் உரையாடுகையில் அவரின் சிந்தனையில்  காற்பந்துத்துறையின்  மாற்றத்திற்கான திட்டங்கள் மேலோங்கி காணப்பட்டது. அந்த வகையில் அவருடன் இணைந்து பணியாற்ற மிஃபா இணக்கம் கண்டுள்ளது.

மேலும் காற்பந்துத்துறை சார்ந்த மிஃபாவின் நடவடிக்கைகளையும்,மாற்றத்திற்கான முயற்சிகளையும் அவர்  வெகுவாக பாராட்டினார்.  அதே நேரத்தில் மிஃபாவின் நோக்கமும் அதற்கான முயற்சிகள் சார்ந்தும் அவரிடம் விளக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து   மிஃபாவின் முயற்சிகள் அனைத்தும்  முன்னுதாரணமாக திகழ்கின்றன  என அவர் குறிப்பிட்டது  மகிழ்ச்சியை அளித்தது என அவர் தெரிவித்தார்.

இந்த மரியாதை நிமித்த சந்திப்பில் மிஃபாவின் தூதரும், காற்பந்து ஜாம்பவனுமாகிய டத்தோ சந்தோக் சிங், மிஃபாவின் துணைத்தலைவர் ஜெ.தினகரன், செயலாளர் கே.அன்பானந்தன்,  துணைச் செயலாளர் வினோ, முதன்மை இயக்க நிர்வாக செயலாளர் சுப்ரா, ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது மிஃபாவின் முதல் ஜெர்சி அவரிடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.