ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > கோடையில் செல்சியின் நிர்வாகி பொறுப்பை ஏற்கிறார் லுவிஸ் என்ரிக்கே ???
விளையாட்டு

கோடையில் செல்சியின் நிர்வாகி பொறுப்பை ஏற்கிறார் லுவிஸ் என்ரிக்கே ???

லண்டன், பிப். 8-

செல்சி கால்பந்து கிளப்பின் நிர்வாகி பொறுப்பை ஏற்க பார்சிலோனாவின் முன்னாள் பயிற்றுனர் லுவிஸ் என்ரிக்கே தயாராகி வருவதாக கூறப்படுகிறது.எனினும் உடனடியாக நிர்வாகி பொறுப்பை ஏற்காமல் வரும் கோடை காலம் வரை காத்திருக்க என்ரிக்கே முடிவு செய்துள்ளதாக பிரிட்டன் டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

பார்சிலோனாவில் மூன்று பருவங்களில் 9 கிண்ணங்களை வென்றுள்ள என்ரிக்கே தற்போது விடுமுறையில் உள்ளார். செல்சியின் நிர்வாகி பொறுப்பை ஏற்கும் பட்சத்தில் பார்சிலோனாவில் தம்முடன் பணியாற்றிய பயிற்றுனர்களைக் கொண்டு வரவும் என்ரிக்கே ஆலோசித்துள்ளார்.

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் கடந்த இரண்டு ஆட்டங்களில் செல்சி தோல்வி கண்டதை அடுத்து நிர்வாகி அந்தோனியோ கொந்தேயின் நிர்வாகி பொறுப்பு கேள்வி குறியாகியுள்ளது. புதிய ஆட்டக்காரர்களை வாங்குவது தொடர்பில் , செல்சி கிளப்பின் நிர்வாகத்துடனும் கொந்தே கருத்து வேறுபாடு கொண்டுள்ளார். இதனால் கொந்தே நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என ஆருடம் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன