முகப்பு > சமூகம் > மோட்டார் சைக்கிளோட்ட போட்டியில் சாதிக்கத் துடிக்கும் முனிசாமி நாயுடுவிற்கு உதவுங்கள்! சிவராஜ் கோரிக்கை
சமூகம்மற்றவைமுதன்மைச் செய்திகள்

மோட்டார் சைக்கிளோட்ட போட்டியில் சாதிக்கத் துடிக்கும் முனிசாமி நாயுடுவிற்கு உதவுங்கள்! சிவராஜ் கோரிக்கை

கோலாலம்பூர், பிப்.8-
மோட்டார் சைக்கிளோட்ட போட்டியில் சாதிக்கத் துடிக்கும் முனிசாமி நாயுடு ஆறுமுகத்திற்கு இந்திய சமூகத்தினர் உதவிக்கரம் நீட்ட வேண்டுமென ம.இ.கா. தேசிய இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து தமது முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் அவர் பதிவிட்டுள்ள காணொளியில் மோட்டார் சைக்கிளோட்ட விளையாட்டுத் துறையில் முனிசாமி நாயுடு சாதிக்க விரும்புவதாகவும் அதற்கு நிதி பிரச்னை ஒரு தடையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பெட்ரோனாஸ் பிரிக் கிண்ண பந்தயத்தில் இடம்பெற வேண்டும் என்ற இலக்கில் இருக்கும் இவர் பல்வேறு மோட்டார் சைக்கிளோட்ட போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்துள்ளார். இவருக்கு இந்திய சமூகத்தினர் குறிப்பாக இந்தியர்கள் சார்ந்த பெரு நிறுவனங்கள் ஓராண்டுக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும்.

நிச்சயமாக இத்துறையில் இந்த இளைஞர் சாதிக்கவிருப்பதை நாம் பார்க்கலாம். அதேவேளையில், ம.இ.கா. தேசிய இளைஞர் தன்னால் இயன்ற உதவிகளை முனிசாமி நாயுடுவிற்கு வழங்கும் என டத்தோ சிவராஜ் கூறினார்.

முனிசாமி நாயுடுவிற்கு உதவ நினைக்கின்றவர்கள் மே பேங்க் வங்கியில் 106026156573 (Munisamy Naidu Arumugam)
என்ற வங்கி கணக்கில் தங்களால் இயன்ற தொகையை செலுத்தலாம்.

Dear MalaysiansLet’s join hands to help our brother Munisamy @ Sam to achieve his dreams in Cup Prix. Please do support him by contribute a small amount to his bank account :Munisamy Naidu Arumugam 106026156573 Maybank Acc NumberYour little help can make him become the pride of our nation.Sincerely from,Sivarraajh Chandran #micyouth

Posted by Sivarraajh Chandran on Wednesday, February 7, 2018

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன