அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > சிசுக்களைக் கைவிடும் சம்பவங்கள் சிலாங்கூரில் அதிகம்!
முதன்மைச் செய்திகள்

சிசுக்களைக் கைவிடும் சம்பவங்கள் சிலாங்கூரில் அதிகம்!

கோலாலம்பூர், ஜூலை 25-

2010லிருந்து 2016 வரையில் மொத்தம் 697 சிசுக்களை கைவிட்டுச் செல்லும் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் சிலாங்கூரில் மட்டுமே 157 பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

புள்ளி விவரங்களின்படி சபா மற்றும் ஜோகூரில் அது போன்ற சம்பவங்கள் 84ம், கோலாலம்பூரில் 65ம், சரவாக்கில் 49ம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ரொஹானி அப்துல் கரிம், சுங்கை சிப்புட், பிஎஸ்எம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டில் (90)புகார்களும், 2014இல் (103), 2015இல் (111), 2016இல் (115) புகார்களும் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.  இந்தக் காலகட்டத்தில் கைவிடப்படும் சிசுக்களை வைக்கும் பெட்டகங்களில் 35 சிசுக்கள் கைவிடப்பட்டிருந்ததாகவும் ரொஹானி தெரிவித்தார்.

அம்மாதிரியான கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான தாமத பிறப்புப் பத்திரப் பதிவைச் செய்வதாகவும், அந்தச் சிசுக்களை சமூக நல இலாகாக்களிலோ அல்லது சம்மதம் தெரிவிக்கும் குடும்பங்களிலோ விட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அக்குழந்தைகளுக்கான குடியுரிமை போன்றவற்றிற்கு தேசிய பதிவிலாகாவிடம் விட்டு விடுவதாகவும் ரொஹானி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன