முகப்பு > கலை உலகம் > விஸ்வாசதிற்கு நான்தான் இசை! – டி.இமான்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

விஸ்வாசதிற்கு நான்தான் இசை! – டி.இமான்

தல அஜித்குமார் சிறுத்தை சிவா இணையும் 4ஆவது திரைப்படமான விஸ்வாசத்திற்கு தாம் இசையமைக்கவிருப்பதாக இசையமைப்பாளர் டி.இமான் தமது சமூக னலைத் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

விவேகம் திரைப்படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் 58ஆவது திரைப்படம் விஸ்வாசம். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். த்திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற கேள்வி இந்த இத்திரைப்படம் தொடங்கப்பட்டதிலிருந்து எழுந்தது. அண்மையில் டி.இமான் இசையமைக்கிறார் என்ற செய்தியும் எழுந்தது.

இந்நிலையில் தமது சமூக வலைத் தளத்தில், பல ஆண்டுகாலமாகவே எப்போது தல திரைப்படத்திற்கு இசையமைப்பீர்கள் என்ற கேள்வி என்னைத் தொடர்ந்து வருகின்றது! இப்போது அதற்கு பதிலளிக்கிறேன். ஆமாம் விஸ்வாசத்திற்கு இசையமைக்கிறேன். நிச்சயம் சிறந்த இசையை வழங்குவேன். இயக்குநர் சிவாவிற்கும் சத்தியஜோதி பிலிம்ஸுக்கும் நன்றி என டி.இமான் கூறியுள்ளார்.

இதனை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன