புதுடில்லி, பிப்.16-
ஆனால், காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட 192 டிஎம்சி தண்ணீர் போதாது என்றும், கூடுதலாக தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும் என்றும் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதேபோல் கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியே மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், காவிரி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டனர்.
நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அதைவிட 14.75 டிஎம்சி குறைத்து தற்போது உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் உள்ளது என்று கூறிய நீதிபதிகள், கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி காவிரிநீர் அளிக்க உத்தரவிட்டுள்ளனர். கேரளா மற்றும் புதுச்சேரிக்கு நதிநீர் பங்கீட்டில் மாற்றம் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தீர்ப்பு வெளியாவதையொட்டி இரு மாநிலங்களிலும் வன்முறைப் போராட்டங்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கர்நாடகத்திற்கு செல்லும் தமிழக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.