திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் மென்செஸ்டர் யுனைடெட்!
விளையாட்டு

வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் மென்செஸ்டர் யுனைடெட்!

மென்செஸ்டர், பிப்.16-

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் கடந்த 3 ஆட்டங்களில் இரண்டில் தோல்வி கண்ட மென்செஸ்டர் யுனைடெட் மீண்டும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.சனிக்கிழமை நடைபெறவுள்ள எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் ஐந்தாவது சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் , ஹடேர்ஸ்பீல்ட் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த பருவத்தின் தொடக்கத்தில் தோல்வியே காணாமல் இருந்த மென்செஸ்டர் யுனைடெட், ஹடேர்ஸ்பீல்ட் அணியிடம் தோல்வி கண்டது. தற்போது மீண்டும் ஓர் அக்னி பரீட்சையை மென்செஸ்டர் யுனைடெட் எதிர்கொள்ளவுள்ளது. டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர், நியூகாசல் யுனைடெட் அணிகளிடம் மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி கண்ட விதம் அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்த இரண்டு ஆட்டங்களிலும் நிர்வாகி ஜோசே மொரின்ஹோ 60 ஆவது நிமிடத்தில் மத்திய திடல் ஆட்டக்காரர் போல் பொக்பாவை வெளியேற்றினார். மென்செஸ்டர் யுனைடெட்டின் முதன்மை அணியில் மொரின்ஹோ, பொக்பாவுக்கு சரியான இடத்தை அடையாளம் காண வேண்டும் என கால்பந்து விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எனினும் இது போன்ற விமர்சனங்கள் தம்மை ஒன்றும் செய்யாது என மொரின்ஹோ தெரிவித்துள்ளார். பிரீமியர் லீக் கிண்ணத்தை வெல்வதில் மென்செஸ்டர் சிட்டியிடம் தோல்வி கண்டுள்ள மென்செஸ்டர் யுனைடெட் தற்போது எப்.ஏ கிண்ணத்தை மட்டுமே நம்பியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன