அனைத்துலக ஏ.டி.பார்த்தசாரதி கிண்ணத்தை வென்றது மிஃபா-ஷாசா!

சென்னை பிப் 18-

சென்னையில் நடைபெற்ற அனைத்துலக ஏ.டி.பார்த்தசாரதி கிண்ண காற்பந்துப்போட்டியில் களம் இறங்கிய மிஃபா-ஷாசா அணியினர் அந்த கிண்ணத்தை வென்று அதிரடி படைத்தனர். இவர்களுக்கு மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் அவர்கள் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

மிஃபா-ஷாசாவின் தலைவர் இந்திரன் தங்கராசு அவர்களின் தலைமையில் சென்னை சென்ற நமது அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இது குறித்து அவர் குறிப்பிடுகையில் மிஃபா-ஷாசாவின் நோக்கம் வெற்றி தோல்வி கடந்து நமது இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்புக்களை அதிகப்படுத்தி அனுபவத்தை மேம்படுத்துவதாகும். அந்த வகையில் இந்த வெற்றி ஊக்கத்தை கொடுத்துள்ளது என்றார்.

நமது அணி எம்.ஏ.எப்.ஓ.ஐ எப்.சி அணியை 2 என்ற கோல்கணக்கிலும், ஏ.டி.பி எப்.பி அணியை 4- என்ற கோல்கணக்கிலும், இறுதியாட்டத்தில் ப்ர்ஸ்ட் டச் எப்.பி அணியை 2 என்ற கோல்கணக்கிலும் வெற்றியை பதிவு செய்து கிண்ணத்தை வென்றனர். சிறந்த விளையாட்டாளர்களாக சந்துரு,ஷோபன், பிரித்திவன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அணியின் மேலாளர் எஸ் சிவக்குமார் நமது விளையாட்டாளர்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என புகழாரம் சூட்டினர். ஏற்பாட்டுக்குழு தலைவர் டத்தோ சல்லாம், பயிற்றுநர் எம்.கே.ராமச்சந்திரன் ஆகியோருக்கு நன்றியினையும் தெரிவித்தார்.

இந்தப்போட்டிகளை காணச்சென்ற காற்பந்து ஜாம்பவானும், மிஃபாவின் தூதருமான டத்தோ சந்தோக் சிங் இளம் வயதில் இந்த மாதிரியான போட்டிகளும், வாய்ப்புக்களும் தரமான விளையாட்டாளர்களை உருவாக்கும் என தெரிவித்தார். இந்த வேளையில் டத்தோ டி.மோகன், இந்திரன் தங்கராசு ஆகியோரின் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது என்றார்.

நன்றி ஆறுமுகம் (சிலாங்கூர் சுக்கிம்)