புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > சீனப் புத்தாண்டில் சோகத்தை ஏற்படுத்திய தீ விபத்து!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சீனப் புத்தாண்டில் சோகத்தை ஏற்படுத்திய தீ விபத்து!

ஷா ஆலம், பிப்.19-
நேற்று இரவு 10.00 மணி அளவில் போர்ட் கிள்ளான், பாகான் ஹைலாம் மீனவர் கம்பத்திலுள்ள வீடுகள் தீப்பற்றியதில் 16 குடும்பங்களின் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்  மகிழ்ச்சியில்லாமல் ஆகி விட்டது.

இது குறித்து சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு நிலைய மற்றும் நடவடிக்கை நிர்வாகப் பிரிவுத் தலைவர் அலிமட்டியா புக்ரி கூறுகையில்,  எழுபது பேர் கொண்ட அக்குடும்பத்தினர் தங்களின் உற்றார் உறவினர்களை மிகவும் உற்சாகமாக வரவேற்று புதிய ஆண்டைக் கொண்டாட திறந்த இல்ல உபசரிப்பை நடத்திய போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக  தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இது தொடர்பில் இரவு 10.25 மணிக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 42 தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து தீயை அணைத்தோம்.

பலகைகளான இந்த வீடுகள் மிகவும் நெருக்கமாக இருந்ததால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாக என அலிமட்டியா கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன