வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ஒப்ஸ் சந்தாஸ் சில்வர்: குண்டர் கும்பலைச் சேர்ந்த 34 பேர் கைது!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஒப்ஸ் சந்தாஸ் சில்வர்: குண்டர் கும்பலைச் சேர்ந்த 34 பேர் கைது!

ஈப்போ, பிப்.19-

கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பலைச் சேர்ந்த 36 பேரை போலீஸ் கைது செய்தது.

இது தொடர்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹஸ்னான் ஹாசான் ஒப்ஸ் சந்தாஸ் சில்வர் 1/2018 எனும் சிறப்புப் நடவடிக்கை கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும்
இருபது முதல் அறுபது வயதிற்குட்பட்டவர்கள். கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி தலைநகர் கோலாலம்பூர், தாமான் ஒயூஜி பகுதியில் டத்தின் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி 27ஆம் தேதி பேரா, சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் பலர் தேடப்படுகிறார்கள். அவர்கள் வெளிநாடு சென்றிருந்தால் அவர்களின் பெயர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்.

கிரிமினல் கும்பலை அமைத்தது, அந்தக் கும்பலுக்கு உதவி புரிந்தது, அந்தக் கும்பலில் உறுப்பினராகச் சேர்ந்தது ஆகிய குற்றங்களுக்காக குற்றவியல் சட்டம் பிரிவு 130 கீழ் விசாரணைக்காக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். நாளை செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் 2012ஆம் ஆண்டு (சிறப்பு நடவடிக்கைக்சள் பாதுகாப்புச் சட்ட விதிகள் பிரிவு 4(5) (சோஸ்மா) கீழ் ஜனவரி 27 தொடங்கி பிப்ரவரி 24ஆம் தேதி வரையில் 28 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கபடுவார்கள் எனவும் டத்தோ ஹஸ்னான் கூறினார்.

இவர்களுக்கு எதிரான குற்றப் பதிவுகள் அடிப்படையில் ஜாமினில் விடுவிக்க வாய்ப்புகள் இல்லை என்று அவர் சொன்னார். கைதானவர்களில் பலர் பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
பணமோசடி, தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி, சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகள் ஆகிய சட்டங்களுக்கு கீழும் இவர்கள் விசாரிக்கப்படுவார்கள். இவர்களின் வங்கிக் கணக்குகளும், வாகனங்களும் சொத்துகளும் முடக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு வெ.4.554 மில்லியன்.

இந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரைத் தேடுகின்றோம். போலீசாரால் தேடப்படுவோட்ர் பட்டியலில் இவர்களின் பெயர்களும் உள்ளன. இவர்கள் மற்ற நாடுகளுக்குத் தப்பிச் சென்றிருந்தால் அவர்களைப் பிடிப்பதற்கு இண்டர்போல் போலீஸ் உதவி நாடப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன