முகப்பு > மற்றவை > கேமரன்மலை: வேட்பாளரை பிரதமர் நஜீப் தீர்மானிக்கட்டும்! டான்ஸ்ரீ கேவியஸ்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

கேமரன்மலை: வேட்பாளரை பிரதமர் நஜீப் தீர்மானிக்கட்டும்! டான்ஸ்ரீ கேவியஸ்

கேமரன்மலை, பிப்.20-

வரும் 14ஆவது பொதுதேர்தலில் கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியில் யார் வேட்பாளராஜ நிறுத்தப்படுவார் என்பதை பிரதமரும் தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தீர்மானிக்கட்டும் என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.

கேமரன்மலை விவகாரம் தொடர்பில் ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தமது அறிக்கையின் வாயிலாக டான்ஸ்ரீ கேவியஸ் மேற்கண்டவாறு கூறினார்.

2000ஆம் ஆண்டிலிருந்து கேமரன்மலை மக்களுக்கு உதவிகளையும் சேவைகளையும் புரிந்து வருகிறேன். அவை அனைத்தையும் தேசிய முன்னணியை மட்டுமே சார்ந்திருக்காமல் எனது சொந்த பணத்தில் செய்துள்ளேன்.

தேசிய முன்னணி மீதான எனது வலுவான நம்பிக்கை, இனம், சமயம், அரசியல் கொள்கை பார்க்காமல் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் இவற்றை செய்துள்ளேன்.

எனக்கு கேமரன்மலை மக்கள் நெருக்கமானவர்கள். காரணம், நான் உள்ளூரைச் சேர்ந்தவன். எனது சேவைகள் பற்றி பூர்வக்குடி மக்கள் உள்பட கிட்டத்தட்ட 7,500க்கும் மேற்பட்ட அனைத்து இன மற்றும் சமய மக்களுக்கும் நன்றாக தெரியும்.

என்னை பொறுத்த வரையில் இந்த தொகுதியை தேசிய முன்னணி தக்க வைத்துக்கொள்ள வேண்டும். ஆயினும், அங்கு எந்த தகுதியான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதை பிரதமர் நஜீப்பே தீர்மானிக்கட்டும் என டான்ஸ்ரீ கேவியஸ் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன