வெள்ளிக்கிழமை, டிசம்பர் 6, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > 1எம்டிபி நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்திருக்கலாம்:டத்தோஸ்ரீ நஜீப்
முதன்மைச் செய்திகள்

1எம்டிபி நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்திருக்கலாம்:டத்தோஸ்ரீ நஜீப்

கோலாலம்பூர், ஜூலை 26 –

1எம்டிபி நிர்வாகத்தில் சில நிர்வாகக் குறைபாடுகள் இருந்திருக்கலாம். ஆனால், தற்போது அது சரி செய்யப்பட்டு வருமானத்தைக் கொண்டு வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் அது சில பிரச்னைகளை எதிர்கொண்டு வந்தது. அதில் மேலும் மேலும் நிதியைச் செலுத்தித் தவறுகளை மூடி மறைக்காமல் அதனை விசாரணை செய்யவும் அதனை மறுசீரமைப்புச் செய்யவும் தாம் பணித்திருப்பதாகவும், முன்னாள் ஆட்சியாளர்கள் செய்தது போன்று தாம் குற்றமிழைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிறுவனத்தைச் சீரமைக்கும் பணி முடிவடைந்த பின்னர் அதன் சொத்துக்களிலிருந்து வருமானம் கிடைப்பதாகவும் அதிலிருக்கும் சில பிரச்னைகளை எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஊதிப் பெரிதாக்குவதாகவும், 1எம்டிபி இல்லையென்றால்  அவர்கள் வேறு பிரச்னைகளைக் கிளப்பி அரசைக் கவிழ்க்க முயற்சிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். அந்நிறுவனத்தின் நிதி மோசடியாக வெளியாக்கப்பட்டு நஜீப்பின் பொருளகக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகப் பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டது.

எனினும், அவர் அதனை மறுத்து வந்துள்ளார். அண்மையில் எதிர்க்கட்சிகளின் பக்காத்தான் கூட்டணியில் மேல்மட்ட பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டதைக் குறிப்பிட்ட நஜீப், அது பதவி ஓய்வு பெற்றவர்களின் கூடாரமாகக் காட்சியளிப்பதாகவும் அதன் மூன்று தலைவர்களில் யாருக்கு அதிகாரம் இருப்பது என்பது குழப்பமாக இருப்பதாகவும், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் ஜசெக திரைமறைவில் அந்தக் கூட்டணியை இயக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்தக் கூட்டணி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவிருக்கும் தலைவரின் கட்சி நாடாளுமன்றத்தில் ஒரேயொரு தொகுதியை மட்டுமே வைத்திருப்பதாகவும் தம்மை சிறையிலடைத்த தலைவரின் பின்னால் ஒளிந்துகொண்டு ஜசெக இயங்குவதாகவும் அவரையே தற்காலிகப் பிரதமராவர் என அது குறிப்பிட்டு வருவதாக  நஜீப் குற்றம் சாட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன