முகப்பு > இந்தியா/ ஈழம் > தொண்டர்களுக்கு கடிதம்; கமலை சாடினாரா ஸ்டாலின்?
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

தொண்டர்களுக்கு கடிதம்; கமலை சாடினாரா ஸ்டாலின்?

சென்னை: தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார் மு.க. ஸ்டாலின். பருவநிலை மாறும் போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். மலர்ந்து உதிரும் பூக்களுக்கு மத்தியில் திமுக ஆயிரங்காலத்துப் பயிர் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோடி தொண்டர்களின் குரல் ஒலிக்கும் கள ஆய்வு என திமுக நிர்வாகிகளை தொடர்ந்து சந்திக்கும் நிகழ்ச்சி குறித்து தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக குடும்ப கட்சி தான்.. பல லட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடுபடும் கட்சி. குடும்பக் கட்சி என்று சொல்ல காரணம் பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக உடன்பிறப்புகள் உள்ளனர். திமுக பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது.

திராவிட மொழி பெருமைக்கும், மக்கள் உரிமைக்கும் உணர்வூட்டும் ஆயிரங்காலத்து ஜீவாதார பயிர் திமுக. ஜீவாதாரப்பயிரை பாதுக்காக்கும் வேலியாக கோடித் தொண்டர்களில் முன்னிற்கும் தொண்டனாக இருக்கிறேன். தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது. பருவநிலை மாறும் போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். மலர்ந்து உதிரும் பூக்களுக்கு மத்தியில் திமுக ஆயிரங்காலத்துப் பயிர்.

திமுக நிர்வாகிகள் உடனான ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்றும் தொய்வின்றித் தொடர்கிறது என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக வெற்றி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஸ்டாலின், இதுவரை 22 மாநகர மற்றும் மாவட்ட திமுக நிர்வாகிகளை அறிவாலயத்தில் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நாளை அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் ஸ்டாலின். திமுக தலைவர் கருணாநிதியை ரஜினி சந்தித்து பேசிய உடன் இதே போல ஒரு அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின். இதே போல நடிகர் கமல்ஹாசன் தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசிய நிலையில் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன