திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > உள்நாட்டினருக்கு சுற்றுலா வரியில்லை:டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ்
முதன்மைச் செய்திகள்

உள்நாட்டினருக்கு சுற்றுலா வரியில்லை:டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ்

கோலாலம்பூர், ஜூலை 26-

எந்த விதமான விடுதிகளிலும் தங்கியிருக்கும் உள்நாட்டினருக்கு சுற்றுலா வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும், வெளிநாட்டினர் தங்கியிருக்கும் ஹோட்டல்கள் மற்றும் உறைவிடம் போன்றவற்றில் அவர்களுக்கு நாளொன்றுக்கு வெ. 10 வீதம் அந்த வரி விதிக்கப்படும். வரியானது ஆள்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கணக்கிடாமல் எத்தனை அறைகள், எத்தனை இரவுகள் தங்கியிருக்கின்றனர் என்பதைக் கணக்கிட்டு வசூலிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த வரியானது சுமையில்லாதது என்றும் அதனால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாதிக்காது என்றும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது குறைவாகவே இருக்கும் எனவும் நஸ்ரி குறிப்பிட்டார். ஓராண்டுக்கு வெ. 211 மில்லியனை இதன் மூலம் வசூலிக்க முடியும் என்றும், வசூலிக்கப்படும் வெ. 10க்கு வெ. 1 வீதம் கணக்கிடப்பட்டு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும்.

அந்த நிதியைக் கொண்டு மாநிலங்கள் தங்களது சுற்றுலா மேம்பாட்டுக்கு அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நஸ்ரி குறிப்பிட்டர். சுங்கத் துறை அந்த வரி வசூலிப்பைக் கணக்கிடும் முறையைத் தயாரித்த பின்னர் இந்த வரி வசூலிப்பு அமலுக்கு வரும் என அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன