ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மலேசியாவின் முன்னாள் கோல் காவலர் சொவ் சீ கியோங் காலமானார் !
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மலேசியாவின் முன்னாள் கோல் காவலர் சொவ் சீ கியோங் காலமானார் !

கோலாலம்பூர், பிப்.21 –

மலேசியாவின் மிக சிறந்த கோல் காவலர்களின் ஒருவரான சொவ் சீ கியோங் புதன்கிழமை காலமானர். 69 வயதுடைய சிறுநீர்பை புற்றுநோய் காரணமாக காலமானார். 1965 ஆம் ஆண்டு தொடங்கி 1969 ஆம் ஆண்டு வரை தேசிய கால்பந்து அணியில் மெர்டேக்கா கால்பந்துப் போட்டியில் விளையாடியுள்ள சொவ் சீ கியோங், 1968 ஆம் ஆண்டில் மெர்டேக்கா கிண்ணத்தை வென்றார்.

1970 ஆம் ஆண்டுகளில் தொழில்முறை கால்பந்து ஆட்டக்காரராக உருவெடுத்த சொவ் சீ கியோங், ஹாங் காங்கில் கால்பந்து போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார். ஜார்டின்ஸ் எப்.சொ. செளத் சீனா , ஹாங் காங் ரேஞ்சர்ஸ் எப்.சி போன்ற கிளப்புகளில் விளையாடினார். கோலாலம்பூரில் செயின் ஜோன் பள்ளியில் பயின்ற , 13 வயதில் தேசிய அளவில் 20 வயதுக்கு உட்பட்ட அணியில் சொவ் சீ கியோங் இடம்பெற்றார்.

பிரேசிலின் குரூசேரோ கிளப், ஒரு முறை சொவ் சீ கியோங் அழைப்பு விடுத்தது. எனினும் சொவ் அந்த அழைப்பை நிராகரித்தார். மலேசியாவின் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த குருசேரோ மீண்டும் சொவ் சீ கியோங்கிற்கு அழைப்பு விடுத்தது. இம்முறை பிரேசிலின் குடியுரிமைப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அந்த வாய்ப்பையும் சொவ் சீ கியோங் நிராகரித்திருந்தார்.

கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கோல் விளையாட்டில் முழு கவனம் செலுத்தினார். சில வாரங்களுக்கு முன்னர் மலாயா பல்கலைகழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சொவ் சீ கியோங் புதன்கிழமை காலையில் இயற்கையை எய்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன