புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களின் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது – மகாதீர் !
முதன்மைச் செய்திகள்

நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களின் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது – மகாதீர் !

பெட்டாலிங் ஜெயா, பிப்.21- 

14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைத்தால்  அதன் தலைவர்கள் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது என துன் டாக்டர் மகாதீர் முஹமட் தெரிவித்துள்ளார். எனவே நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் இதுவரை வழங்கியுள்ள 60 வாக்குறுதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாக மகாதீர் கூறினார்.

அரசாங்கத்தின் நிதி ஆற்றலுக்கு அப்பால் இருக்கும் எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்ற இயலாது என மகாதீர் தெரிவித்தார்.  தேர்தல் வாக்குறுதி அறிக்கையைத் தயாரிக்கும் முன்னர் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.

ஆனால் ஆட்சி அமைத்ததும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலவில்லை என்றால் அது நம்பிக்கைக் கூட்டணியின் மீதான நம்பிக்கையை சிதைத்து விடும் என மகாதீர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நம்பிக்கைக் கூட்டணி பதிவு தொடர்பில் சங்கங்களின் பதிவகம் மீது நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ள ஆலோசித்திருப்பதாக மகாதீர் கூறினார். கடந்த ஆண்டின் மத்தியில் பக்காத்தான் ஹரப்பானை பதிவு செய்ய கோரிக்கை விடுத்திருந்தோம்.  ஆனால் இதுவரை அந்த பதிவுக்கு பதில் கிடைக்கவில்லை.

எனவே நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் சங்கங்களின் பதிவகத்தை அணுக ஆலோசித்துள்ளதாக மகாதீர் கூறினார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன