வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > மன்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தியது பார்சிலோனா!
விளையாட்டு

மன்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தியது பார்சிலோனா!

நியூயார்க், ஜூலை 27-

உலகின் தலைசிறந்த கால்பந்து அணிகள் சுற்றுலா நட்புமுறை ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இந்த வகையில் அமெரிக்காவில் சாம்பியன் கிண்ணப் போட்டி நடந்து வருகின்றது. இந்தப் போட்டியில் உலகின் முன்னணி கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.

இப்போட்டியின் முதல் ஆட்டத்தில் மன்செஸ்டர் யுனைடெட், சக நாட்டு அணியான மன்செஸ்டர் சிட்டியை 2 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது. பின்னர் ஸ்பெய்னின் ரியல் மாட்ரிட் அணியுடன் 1 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை கண்டாலும், பெனால்டியின் மூலம் வெற்றி பெற்றது.

இந்நிலையில் மலேசிய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு ஸ்பெய்னின் பலம் பொருந்திய பார்சிலோனா அணியை சந்தித்தது. ஆட்டம் தொடங்கியது முதல் பார்சிலோனா கோல் புகுத்த தொடர் தாக்குதல்களை முன்னெடுத்தது. ஆனால் அதன் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

இதனிடையே அவ்வணியின் முன்னணித் தாக்குதல் ஆட்டக்காரர்களான நெய்மார், மெஸ்சீ, சுவாரேஸ் ஆகியோரை கட்டுப்படுத்த மன்செஸ்டர் யுனைடெட் தற்காப்பு ஆட்டக்காரர்கள் தடுமாறினார்கள். இத்தருணத்தில் ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் நெய்மாரை கட்டுப்படுத்த முடியாமல் வெலன்சியா தடுமாறி கீழே விழுந்தார்.

அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பார்சிலோனா அணிக்கான கோலை நெய்மார் புகுத்தினார். அதன் பிறகு மன்செஸ்டர் யுனைடெட் அணி ஆட்டத்தை சமப்படுத்த கடுமையாகப் போராடியது. ஆனால் அதன் முயற்சிகள் வெற்றி தரவில்லை. இதனால் முற்பாதி ஆட்டம் 0 என்ற கோல் எண்ணிக்கையில் பார்சிலோனாவிற்கு சாதகமாக முடிந்தது.

பிற்பாதி ஆட்டம் தொடங்கியது முதல் மன்செஸ்டர் யுனைடெட் அணி பார்சிலோனா அணியின் தற்காப்பு பகுதிக்குள் நுழைந்து தாக்குதல்களை தொடுத்தது. சில அற்புதமான வாய்ப்புகளை மார்கோஸ் ராஷ்போர்ட், அந்தோனியோ மார்ஷேல் தவறவிட்டனர். இறுதி நிமிடம் வரை போராடியும் மன்செஸ்டர் யுனைடெட் அணியால் கோல் புகுத்த முடியவில்லை. இதனால் ஆட்டம் 0 என்ற கோல் எண்ணிக்கையில் பார்சிலோனா அணிக்கு சாதகமாக முடிந்தது. இந்த வெற்றியால், பார்சிலோனா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கிடையிலான ஆட்டத்தை 80 ஆயிரம் ரசிகர்கள் கண்டு களித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன