பிக் பாஸ் ஓவியாவுக்கு கல்பனா அக்கா வழங்கிய அறிவுரை!

0
8

கோலாலம்பூர், பிப். 24-
அண்மையில் தாம் ஏற்பாடு செய்திருந்த இசை எஃப்.எம் மூசிக் ஃபெஸ்திவல் (இசை விழா) நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை என கூறி அதன் ஏற்பாட்டுக்குழு தலைவர் ஃபங்கி சங்கர் குற்றச்சாட்டை காணொளி வாயிலாக வெளியிட்டிருந்தார்.

இந்த காணொளியைப் பார்த்த கனடாவைச் சேர்ந்த பிரபல ‘பாடகி கல்பனா பிக் பாஸ் புகழ் ஓவியாவிற்கு மறைமுகமாக அறிவுரை வழங்கியிருப்பதோடு ஃபங்கி சங்கருக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில், ஃபங்கி சங்கரின் காணொளியை அண்மையில் தாம் பார்த்ததாகவும் அவரது ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர்கள் ஆதரவு தராததால் அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்பையும் அவர் தெரிவித்துள்ளது வேதனையளிப்பதாகவும் கல்பனா தெரிவித்துள்ளார்.

கலைஞர்கள் தங்களை நம்பி நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொள்வது முதலானவற்றை செய்ய வேண்டும். நான் என்னுடைய ரசிகர்களிடம் அப்படித்தான் நடந்துக்கொள்கிறேன். தங்களுக்கு ரசிகர்கள் அதிகரித்துவிட்ட பிறகு அவர்கள் மாறிவிடக்கூடாது என கல்பனா கூறியுள்ளார்.

அவர் அக்காணொளியில் ஓவியாவின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் அவர் ஃபங்கி சங்கருக்கு ஆதரவாக காணொளியை வெளியிட்டிருப்பதன் வாயிலாக அவர் ஓவியாவிற்கு அறிவுரை வழங்குவதாகவே அக்காணொளி அமைந்துள்ளது.

https://www.facebook.com/anegunnews/