பூச்சோங், ஜூலை 27-

பூச்சோங் 14ஆ-வது மைல் இடைநிலைப்பள்ளியில் பயின்று 2006-ஆம் ஆண்டு வெளியேறிய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி சமீபத்தில் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. இந்த ஒன்றுக்கூடல் கடந்த ஜூலை 15ஆம் தேதி சனிக்கிழமையன்று மாலை மணி 7.00க்கு பூச்சோங்கில் அமைந்திருக்கும் எம்த்ரீ ஹோட்டலில் நடந்தது.

இதில் சுமார் 36 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளிப் பருவத்தை முடித்து 11 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கிடையே உறவை மேலும் வலுவடையச் செய்வதே இந்த ஒன்றுக்கூடலின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.

அதுமட்டுமல்லாமல், சில ஆண்டுகளுக்கு முன் காலமான இரண்டு முன்னாள் மாணவர்களை நினைவு கூர்வதும் இந்நிகழ்ச்சியில் ஓர் அங்கமாக இருந்தது. இந்நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டுக் குழுவினரைச் சேர்ந்த பாரிதிவாணன், இளங்கோ, விக்கி, குமாரி கஸ்தூரி மற்றும் மதிவதனி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுக்களையும் சக முன்னாள் மாணவர்கள் தெரிவித்துக் கொண்டார்கள்.

இம்மாதிரியான நிகழ்ச்சிகள் பள்ளிப் பருவத்தை முடித்துச் சென்ற மாணவர்களிடையே ஒரு நல்ல வழுவான உறவை தொடர்ந்து ஏற்படுத்திக் கொடுப்பதோடு பிறருக்கு இந்நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் பெரிதும் நம்புகின்றார்கள். இனி வரும் காலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என அவர்கள் உறுதி கூறினர்.