சென்னை, பிப்.26-

தமிழ், இந்தி உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் துபாயில் இறந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது. அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் தாமதங்கள் நிலவி வந்தது.

குறிப்பாக, அவர் இறந்ததற்கான மருத்துவ சான்றிதழ் கிடைப்பதில் தாமதமானது. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி அளவுக்கதிகமான குடிபோதையில் நிலைத்தடுமாறி குளியல் தொட்டியில்   விழுந்து உயிரிழந்திருப்பதாக அவரது சவபரிசோதணை முடிவுகள் காட்டுகின்றன.

குறிப்பாக, அவர் மாரடைப்பால்தான் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில் அவர் குடிபோதையில் நிதானம் இன்றி தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் குளியலையில் உள்ள குளியல் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

குளியலைறைக்கு சென்ற ஸ்ரீதேவி அங்கிருந்து வெளியேறாததால் சந்தேகமடைந்த அவரது கணவர் போனி கபூர் உள்ளெ சென்று பார்த்தார். அப்போது குளியல் தொட்டியில் அவர் உடல் அசைவின்றி கிடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்தார். அங்கு அவர் தனது கணவருடன் நடனமாடிய காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகை குடிபோதையால் உயிரிழந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது ஸ்ரீதேவியின் பிரேதபரிசோதணை அறிக்கை கிடைத்து விட்டதால் அவரது பிரேதம் இன்று இரவில் விமானம் வாயிலாக மும்பைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

ஸ்ரீதேவியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடம்