சென்னை, ஜூலை.27 –
அன்பானவன், அசராதவன் , அடாங்காதவன் என்ற ஒரு படத்தில் 25 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தாம் சம்பாதித்திருந்த ஒட்டு மொத்த பெயரையும் இழந்த டி.ஆர். சிலம்பரசன் தற்போது கெட்டவன் படத்தை தூசு தட்டும் பணிகளில் இறங்கியுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் லேகா வாஷிங்டனை கதாநாயகியாக நடிக்க கெட்டவன் என்ற படத்தை சிம்பு தொடங்கினார். பின்னர் அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு சிலம்பாட்டம் படத்தில் நடித்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் சிம்பு பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். ஆக கடைசியாக ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் வெளிவந்த அன்பானவன், அசராதவன் , அடாங்காதவன் படம் சிம்புவுக்கு பலத்த அடியை கொடுத்துள்ளது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பரில் வெளியாகும் என தெரிவித்த இயக்குனரும் சிம்புவும் தற்போது அமைதி காக்கின்றனர்.
இதற்கிடையில் பில்லா 3 படத்தை சிம்புவை வைத்த வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்தி வெளிவந்தது. பின்னர் விஷ்ணுவர்தன் அந்த படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. தற்போது சிம்புவே அந்த படத்தை இயக்கப் போவதாக இந்தியா கிலிட்ஸ் இணைய ஊடகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இந்த படத்துக்கான சில காட்சிகளை சிம்பு படமாக்கியிருப்பதாகவும் விரைவில் அதற்கான முன்னோட்டம் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆரம்பம், போகன் படங்களில் நடித்த அக்ஷரா கெளடா இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்தக் கொடுமை மட்டும் நடக்கவே கூடாது!