சென்னை, பிப்.28-

தமிழ்நாட்டில் மட்டுமின்றி அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஆன்மீகவாதி காஞ்சிபுரம்: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி (வயது 83) உடல்நலக் குறைவால் காலமானார்.

திடீரென இன்று காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெயேந்திரர் காலமானார்.

காஞ்சி மடத்தின் 69ஆவது மடாதிபதியாக 1994ஆம் ஆண்டு ஜெயேந்திர சரஸ்வதி பொறுப்பேற்றார். முன்னதாக 1954ஆம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டார் சுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட காஞ்சி ஜெயேந்திரர் என்பது குறிப்பிடத்தக்கது.