சென்னை, ஜூலை.27 –
தமிழ் திரையுலகில் வித்தியாசமான படங்களை வழங்கக்கூடியவர் என்ற பெயர் பெற்றுள்ள விஜய் சேதுபதி இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மாதவனுடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த விக்ரம் வேதா கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி தமிழ் திரை ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக விஜய் சேதுபதி ஏற்றிருந்த வேதா கதாபாத்திரத்தை சமூக ஊடங்களில் பலர் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் தனது அடுத்த படத்தில் விஜய் சேதுபதியை கதாநாயகனாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மணிரத்னத்தின் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த காற்று வெளியிடை மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் மணிரத்னம் – விஜய் சேதுபதி கூட்டணியில் புதிய படம் உருவாகும் தகவல் தமிழ் திரை ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
