பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வு

0
2

கோலாலம்பூர், பிப் 28-       

மார்ச் முதல் வாரத்தில் ரோன் 95 பெட்ரோல் விலை 3 காசும் ரோன் 97 பெட்ரோல் விலை 4 காசும் அதிகரிக்கிறது. இந்நிலையில் டீசல் விலை 5 காசு அதிகரிக்கிறது.

கடந்த வாரம் முழுவதும் ரோன் 95 பெட்ரோல் விலை 2.17 காசுக்கு விற்கப்பட்ட நிலையில் வருகின்ற வாரத்திற்கு 2.20 காசுக்கு விற்கப்படும். அதேபோல் கடந்த வாரம் 2.43 காசுக்கு விற்கப்பட்ட ரோன் 97 பெட்ரோல் விலை 2.47 காசுக்கு விற்கப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த வாரம் 2.13 காசுக்கு விற்கப்பட்ட டீசல் விலை இந்த வாரம் 2.18 காசுக்கு விற்கப்படும். இந்தப் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளை தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும்.