வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > டத்தோஸ்ரீ ஞானராஜாவின் ஆடம்பர கார்கள், வீடு முடக்கம்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

டத்தோஸ்ரீ ஞானராஜாவின் ஆடம்பர கார்கள், வீடு முடக்கம்!

கோலாலம்பூர், பிப்.28-

பினாங்கு மாநிலத்தில் வெ.630 கோடி மதிப்பிலான மிகப்பெரிய கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான புலன்விசாரணையை நிறுத்துவதற்கு வெ.1.9 கோடியை பெற்றதாக நம்பப்படும் டத்தோஸ்ரீ ஜி. ஞானராஜாவின் ஆடம்பர வீடு, 4 ஆடம்பர கார்கள், அவரது 4 கம்பெனிகளின் வங்கி கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடக்கியுள்ளது.

அவரது 4 கம்பெனிகளின் சுமார் 36 லட்சம் மதிப்பிலான வங்கி கணக்கு, 13 லட்சம் மதிப்பிலான டோயோட்டா வெல்பையர், மெர்சிடேஸ் பேன்ஸ், லண்ட் ரோவர், ஹுண்டாய் ஸ்டாரேக்ஸ் முதலான ஆடம்பர கார்கள், 167,900 வெள்ளி மதிப்பிலான 3 தொலைக்காட்சிகள், 25 லட்சம் மதிப்பிலான ஆடம்பர வீடு ஆகியவை முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டத்தோஸ்ரீ ஞானராஜாவிற்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை பிரிவு முதன்மை இயக்குநர் டத்தோ சிமி அப்துல் கனி உறுதிபடுத்தினார்.

பினாங்கு மாநிலத்தில் வெ.630 கோடி மதிப்பிலான மிகப்பெரிய கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான புலன்விசாரணையை நிறுத்துவதற்கு வெ.1.9 கோடியை பெற்றதாக  டத்தோஸ்ரீ ஜி. ஞானராஜாவின் தடுப்பு காவல் மேலும் ஆறு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை அவரை கைது செய்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தடுப்பு காவலை நீட்டிப்பதற்காக இன்று காலை அவரை புத்ராஜெயா மாஜிஸ்திரெட் நீதிமன்றத்துக்கு கொண்டு வந்தது. 37 வயதுடைய டத்தோஸ்ரீ ஜி. ஞானராஜா, காலை 9.10 மணி அளவில் எம்.ஏ.சி.சி-யின் ஆரஞ்சு நிறத்திலான சிறை உடையில் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தார்.

வருகின்ற மார்ச் 5ஆம் தேதி வரையில் டத்தோஸ்ரீ ஞானராஜாவைத் தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன