திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > கெட்கோ விவகாரம்: மாநில போலீசின் அதிகாரமீறலை விசாரிக்க கோரிக்கை
முதன்மைச் செய்திகள்

கெட்கோ விவகாரம்: மாநில போலீசின் அதிகாரமீறலை விசாரிக்க கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 27-
கேட்கோ நில உரிமை விவகாரத்தில் நெகிரி செம்பிலான் போலீசின் அதிகார மீறலை தடுக்கக்கோரி சுமார் 70   இன்று காலை மணி 10.30 அளவில் தலைநகரிலுள்ள புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் முன்பு திரண்டனர்.

பி.எஸ்.எம். கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் தலைமையில் ஒன்று திரண்ட அவர்கள் அனைவரும் மாநில போலீசுக்கு எதிராக குரலெழுப்பியதோடு கெட்கோ நிலம் தங்களுடையது என கோஷமிட்டனர்.

மேலும், அண்மையில் கெட்கோ குடியிருப்பாளர்களை மாநில போலீஸ் கைது செய்த விவகாரத்தில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் தலையிட வேண்டுமென வலியுறுத்தி மகஜரையும் வழங்கினர். இது குறித்து அருட்செல்வம் கூறுகையில், கெட்கோ குடியிருப்பாளர்களின் நில பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. அண்மையில் கெட்கோ குடியிருப்பாளர்களை மாநில போலீஸ் கைது செய்து அதிகார மீறலில் ஈடுபட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து விசாரிப்பதற்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் சிறப்பு குழுவை அமைக்க வேண்டுமென செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து பேசுவதற்கு தன்னுடன் வந்த சில பேருக்கு அனுமதி வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட போதிலும் புக்கிட் அமான் மறுத்து விட்டது. மாநில போலீஸ் தலைமையகத்தின் உத்தரவின் பேரில் கெட்கோ குடியிருப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் நிலையம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் மகஜரை கொடுக்க முடிவெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இவ்விவகாரத்தில் போலீசின் கடமை பாதுகாப்பு பணியை மேற்கொள்வதாகும். மாறாக, எந்தத் தரப்பினருக்கும் ஆதரவாக செயல்பட கூடாது. திவாலான ஒரு நிறுவனத்திடமிருந்து மாநில அரசாங்கமும் தாமரை நிறுவனமும் கம்போங் கெட்கோ நிலத்தை வாங்கியதை மேற்கோள்காட்டி அருட்செல்வம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கம்போங் கெட்கோவிலிருந்து வெட்டு மரங்களை ஏற்றிவந்த லோரிகளை வழிமறித்ததாக கடந்த 18ஆம் தேதி 18 கெட்கோ குடியிருப்பாளர்களையும் 24ஆம் தேதி மேலும் 30 பேரையும் ஜெம்போல் போலீஸ் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன