அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > சிரியாவை காக்கும் நோக்கில் ஐ.நா.விற்கு மனு!
சமூகம்மற்றவைமுதன்மைச் செய்திகள்

சிரியாவை காக்கும் நோக்கில் ஐ.நா.விற்கு மனு!

கோலாலம்பூர், மார்ச் 1-

சிரியாவில் நடைபெறும் போரில், அநியாயமாக மக்கள் உயிர் இழப்பதை கண்டித்து மலேசியாவின் ரினா பத்துமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இவர் மலேசியாவின் 2017ஆம் ஆண்டிற்கான அனைத்துலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். மேலும், ரினா மலேசியாவின் அமைதி மற்றும் மனிதபிமான தூதரும் ஆவர்.

அப்பாவி சிறுவர்களும் மக்களும் பலியாவதை தடுக்க ரினா அவர்களால் ஐநா மன்றத்துக்கு மனு ஒன்று சமர்பிக்கபட உள்ளது. இந்த உன்னத நோக்கத்திற்காக ரினா, மலேசியர்களின் ஆதரவை நல்கியுள்ளார். மலேசியர்கள் http://chn.ge/2CqtIK6 என்னும் இணையதளம் வழியாக தங்களின் ஆதரவை தெரிவிக்கலாம்.

இவரது இந்த போராட்டத்திற்கு அமலான் நேஷ்னல் இயக்கத்தின் உதவி தலைவர் முரளி பாலா தனது உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளார். தன்னால் முடிந்த எல்லா உதவிகளும் வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன