அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் சுவீடனுக்கு விளையாடத் தயார் !
விளையாட்டு

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் சுவீடனுக்கு விளையாடத் தயார் !

லண்டன், மார்ச்.2 –

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் சுவீடன் தேசிய கால்பந்து அணிக்கு விளையாட தாம் தயாராக இருப்பதாக மென்செஸ்டர் யுனைடெட் தாக்குதல் ஆட்டக்காரர் சிலாதான் இப்ராஹிமோவிச் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் நடந்த ஐரோப்பிய கிண்ண கால்பந்துப் போட்டிக்குப் பின்னர், இப்ராஹிமோவிச் அனைத்துலக கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

36 வயதுடைய சிலாதான் இப்ராஹிமோவிச், இந்த பருவத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியுடன் ஐந்து ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார். காயம் காரணமாக இப்ராஹிமோவிச்சுக்கு வாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளன. இருப்பினும் சுவீடன் அணிக்கு தம்மால் சிறந்த ஆட்டத்தை வழங்க முடியும் என இப்ராஹிமோவிச் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் சுவீடன் தேசிய கால்பந்து அணியில் 116 அனைத்துலக ஆட்டங்களில் விளையாடியுள்ள இப்ராஹிமோவிச், 62 கோல்களைப் போட்டுள்ளார். ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் சுவீடன், எப் பிரிவில் இடம்பெற்றுள்ளது . இதே பிரிவில் ஜெர்மனி, மெக்சிக்கோ, தென் கொரியாவும் இடம்பெற்றுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன