ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ஸ்பெயின் லா லீகா – பார்சிலோனாவுடன் சமநிலைக் கண்டது லாஸ் பல்மாஸ்
விளையாட்டு

ஸ்பெயின் லா லீகா – பார்சிலோனாவுடன் சமநிலைக் கண்டது லாஸ் பல்மாஸ்

பார்சிலோனா, மார்ச்.2 –

ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா 1- 1 என்ற கோல்களில் லாஸ் பல்மாசுடன் சமநிலைக் கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தில் பார்சிலோனா எளிதில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது. எனினும் சமநிலை முடிவு பார்சிலோனாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் லா லீகா பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள அத்லேட்டிக்கோ மாட்ரிட்டைக் காட்டிலும் பார்சிலோனா 5 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை இவ்விரண்டு அணிகளும் மோதவிருக்கின்றன.

21 ஆவது நிமிடத்தில் லியோனெல் மெஸ்சி போட்ட கோலின் மூலம் பார்சிலோனா 1-0 என்ற கோலில் முன்னணி வகித்தது. எனினும் 48 ஆவது நிமிடத்தில் ஜோனதன் கலேரி அடித்த கோலின் மூலம் லாஸ் பல்மாஸ் ஆட்டத்தை சமப்படுத்தியது.

ஞாயிற்றுக்கிழமை நூ கேம்ப் அரங்கில் பார்சிலோனாவும் அத்லேட்டிக்கோ மாட்ரிட்டும் சந்திக்கவுள்ளன. கடந்த எட்டு லீக் ஆட்டங்களில் அத்லேட்டிக்கோ மாட்ரிட் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள வேளையில் பார்சிலோனா, நான்கு ஆட்டங்களில் சமநிலைக் கண்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன