செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > டி.எச்.ஆர். ராகாவின் சீரியல் பேய் 2.0
கலை உலகம்

டி.எச்.ஆர். ராகாவின் சீரியல் பேய் 2.0

வானொலி வாயிலாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது மட்டுமின்றி தங்களின் நடிப்புத்திறனை சீரியல் பேய் நாடகத்தில் வெளிக்காட்டி ரசிகர்களின் பாராட்டும் ஆதரவும் பெற்ற டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்கள் மீண்டும் சீரியல் பேய் 2.0 நாடகத்தில் கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களை மிகச் சிறப்பாகவே நடித்துள்ளனர்.

மர்மம், திகில், நகைச்சுவை என அனைத்து அம்சங்களும் கலந்து சீரியல் பேய் 2.0 நாடகம் எதிர்வரும் ஜூலை 31-ஆம் தேதி முதல் ராகாவின் முகநூல் மற்றும் யூடியுபில் இடம்பெறவுள்ளது. இன்றைய டிஜிட்டல் உருமாற்றத்தைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு 11 அத்தியாயங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட சீரியல் பேய் நாடகத்தின் காணொளிகள் முகநூல் மற்றும் யூடியுப் வாயிலாக 10 மில்லியனுக்கு மேற்பட்ட பேரை சென்றடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நாடகத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த மகத்தான ஆதரவுக்கு இம்முறை 15 அத்தியாயங்களுடன் சீரியல் பேய் 2.0 நாடகம் சமூக வலைத்தளங்களில் வலம் வரவிருக்கின்றது. மீண்டும் ராணி சுந்தரராஜூ இயக்கத்தில் இந்நாடகத்தில் ராகாவின் அறிவிப்பாளர்கள் ஆனந்தா, உதயா, ராம், ரேவதி, சுரேஷ், கவிமாறன், கீதா, அகிலா, ஷாலு, ஜெய், யாசினி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இவர்களுடன் டி.எச்.ஆர் ராகாவின் ‘நடிக்க வரலாம் வா எனும் போட்டியின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷாந்தினி ஜெகதீசன் மற்றும் சுபாஷினி சங்கரன் நடித்துள்ளார்கள். இந்நாடகத்தின் முன்னோட்டம் டி.எச்.ஆர் ராகாவின் அதிகாரப்பூர்வ முகநூலில் ஜூலை 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதுவரை 30,000-க்கும் மேற்பட்டவர்கள் கண்டு களித்துள்ளார்கள்.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை டி.எச்.ஆர் ராகா முகநூலில் மற்றும் யூடியுபில் வெளியிடப்படும் இந்நாடகம் சமூக வலைத்தளங்களில் மட்டுமின்றி வானவில் அலைவரிசையிலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒளிபரப்பப்படும். அதே வேளையில், ரசிகர்கள் இந்நாடகத்தைக் கண்டு களித்து ராகாவின் அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான விடையளித்து ரிம 300 வெல்லும் வாய்ப்பும் காத்துக் கொண்டிருக்கின்றது. மேல் விவரங்களுக்கு raaga.fm அகப்பக்கத்தை அல்லது முகநூலை நாடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன